பாகிஸ்தான் அரசு ஒட்டுமொத்தமாக வான்வெளியை மூடியுள்ளது...! 'ஆப்ரேஷன் சிந்தூர்' எதிரொலியா என்ன?
Pakistani government has completely closed its airspace repercussions Operation Sindoor
காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.இதனால் இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தது. இதன் காரணமாக, பாகிஸ்தான் வான்வெளியை இந்திய விமானங்கள் பயன்படுத்த தற்போது பாகிஸ்தான் தடைவிதித்தது.

இந்நிலையில் நள்ளிரவு 1.05 முதல் 1.30 மணி வரை 25 நிமிடத்திற்குள் இந்திய முப்படைகள் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பகுதியிலுள்ள பயங்கரவாதிகள் முகாம்களை துல்லியமாக தாக்கி வேரோடு அழித்தது.
இதற்கு ''ஆப்ரேஷன் சிந்தூர்'' எனப் பெயரிடப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் அரசு ஒட்டுமொத்தமாக பாகிஸ்தான் வான்வெளியை மூடியுள்ளது. இதில், இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டி (பாகிஸ்தான் ராணுவ தலைமையகம்) இந்த அறிவிப்பை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.
மேலும், பாகிஸ்தான் நாட்டு விமானங்கள் உள்பட அனைத்து விமானங்களுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதில்,அவசரநிலைக்கு மட்டுமே அனுமதி வழங்கியுள்ளது.இதன் நடுவே, இந்தியாவின் அதிரடி தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் தாக்குதல் நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் குறிப்பாக ராணுவ வல்லுநர்கள், பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் அது பதிலடியாக இருக்காது. பதற்றத்தை அதிகரிக்கும் எனத் தெரிவித்துள்ளனர்.மேலும், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தேசிய பாதுகாப்பு கவுன்சிலை சந்தித்து பாகிஸ்தான் கொடுக்க வேண்டிய பதிலடி குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
English Summary
Pakistani government has completely closed its airspace repercussions Operation Sindoor