யூடியூப் பார்த்து கல்லூரி மாணவிக்கு பிரசவம் பார்த்த வாலிபர்!
Teenager watches college student give birth on YouTube
வாலிபர் ஒருவர் யூடியூப் பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு இளம்பெண் ஒருவரை நேற்று சிகிச்சைக்காக வாலிபர் ஒருவர் அழைத்து வந்தார்.அப்போது அந்த பெண்ணுக்கு பிரசவம் ஆகியிருந்ததையும், ரத்தப்போக்கு அதிக அளவில் ஏற்பட்டு இருந்ததும் டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது தெரிந்தது.
உடனே சிகிச்சை அளித்த டாக்டர்களுக்கு அந்த வாலிபரும், இளம்பெண்ணும் கணவன்-மனைவி தானா? என்று சந்தேகம் ஏற்பட்டதையடுத்து மருத்துவத்துறை இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தினார். அப்போது விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது:
அவினாசியை சேர்ந்த வாலிபர் ஒருவர் தன்னுடைய தாயார் மற்றும்இளம்பெண்ணுடன் கடந்த ஆண்டு கோபி கச்சேரிமேடு காலனியில் உள்ள வீட்டுக்கு குடிவந்துள்ளார். அப்போது அந்த இளம்பெண் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் தங்கி படித்து வந்துள்ளார். அந்த நேரத்தில் வாலிபருக்கும், அந்த மாணவிக்கும் காதல் இருவரும் திருமணம் ஆகாமலேயே கணவன்-மனைவிபோல் சேர்ந்து வாழ்ந்துள்ளனர்.
இதற்கிடையே மாணவி கர்ப்பமாகியதால் பெற்றோருக்கு தெரியாமல் இருக்கவேண்டும் என்பதற்காக வாலிபர் திருப்பூரில் இருந்து கோபிக்கு குடிவந்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாணவிக்கு பிரசவ வலி ஏற்பட்டபோது வாலிபர் யூடியூப் பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளார். இதில் பெண் குழந்தை பிறந்தது.
ஆனால் மாணவிக்கு ரத்தப்போக்கு நிற்கவில்லை. அதனால் மாணவியை சிகிச்சைக்காக கோபியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு டாக்டர்களுக்கு சந்தேகம் ஏற்படவே விஷயம் வெளியில் வந்துவிட்டது. தொடர்ந்து வாலிபரிடம் மருத்துவத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் கோபியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Teenager watches college student give birth on YouTube