'ஜன நாயகன்' படத்தில் 'ஜன நாயகன்' படத்தில் விஜய்க்கு இப்படியொரு பெயரா..? மகிழ்ச்சியில் TVK தொண்டர்கள்..!
Do you know what Vijay name is in the film Jana Nayagan
தவெக தலைவர் மற்றும் நடிகர் விஜய் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் 'ஜன நாயகன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 09-ஆம் தேதி உலகளவில் வெளியாகவுள்ளது. விஜய் 'ஜன நாயகன்' படத்திற்கு பிறகு முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ளார்.
இது விஜய்யின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவுள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, வில்லனாக பாபி டியோல் நடிக்கிறார். இவர்களுடன் முக்கிய கதாப்பாத்திரங்களில் நரேன், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தற்போது படத்தின் பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், ஜன நாயகன் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது, ஜனநாயகன் திரைப்படத்தில் விஜய்க்கு 'தளபதி வெற்றி கொண்டான்' (TVK) என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பெயர், வித்தியாசமாக இருப்பதோடு மட்டுமல்லாது, அவரது கட்சி (TVK) ரெபரன்ஸ் கொண்டதாகவும் இருக்கிறது. ஆனால் இந்த பெயர் குறித்த அதிகார பூர்வ தகவல் வெளியாகவில்லை.
English Summary
Do you know what Vijay name is in the film Jana Nayagan