பழிக்குப்பழி நடவடிக்கை; இந்தியாவின் தாக்குதல் குறித்து டிரம்ப் பேச்சு!
Vindictiveness Trump talks about Indias attack
பழிக்குப்பழி நடவடிக்கையாக இந்த தாக்குதல் நடந்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையே சண்டையை தடுக்க என்னால் ஏதேனும் செய்ய முடியுமென்றால் அதை செய்ய நான் தயாராக உள்ளேன்' என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த மாதம் 22ம் தேதி பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட 'தி ரெசிஸ்டண்ட் பிரண்ட்' பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனத்தை தெரிவித்தது.
இந்தநிலையில் இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் என்று பெயரிடப்பட்டு இந்தியா நேற்று அதிரடி தாக்குதல் நடத்தியது. 9 இடங்களில் இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 31 பேர் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய தாக்குதல் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறியதாவது:. இந்த தாக்குதல் மிகவும் மோசமானது. இரு நாடுகளையும், இந்த போர் பதற்றத்தை இரு நாடுகளும் பேசி தீர்க்க வேண்டுமென நான் நிலைக்கிறேன். இரு நாடுகளும் சண்டையை நிறுத்த வேண்டுமென நான் நினைக்கிறேன். இப்போது இருநாடுகளும் சண்டையை நிறுத்தலாம். பழிக்குப்பழி நடவடிக்கையாக இந்த தாக்குதல் நடந்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையே சண்டையை தடுக்க என்னால் ஏதேனும் செய்ய முடியுமென்றால் அதை செய்ய நான் தயாராக உள்ளேன்' என்றார்.
English Summary
Vindictiveness Trump talks about Indias attack