'ஆர்யா சூப்பர் ஸ்டாரிடம்... என்னை தர்ம சங்கடமான சூழ்நிலையில் மாட்டி விட்டுட்டான்'...! - நடிகர் சந்தானம்
Arya left me embarrassing situation to superstar Actor Santhanam
நடிகர் 'சந்தானம்' நடிப்பில் இயக்குனர் 'பிரேம் ஆனந்த்' இயக்கத்தில் வெளியான 'டிடி ரிட்டன்ஸ்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதைத் தொடர்ந்து இப்படத்தின் அடுத்த பாகமான 'DD Next level 'உருவாகியுள்ளது.இதில் முதலாம் பாகத்தை இயக்கிய 'பிரேம் ஆனந்த்' இப்படத்தையும் இயக்கியுள்ளார்.

மேலும் இப்படத்தில், இயக்குனர்கள் கவுதம் மேனன், செல்வராகவன், நடிகர் மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.முக்கியமாக இப்படத்தை நடிகர் ஆர்யாவின் தயாரிப்பு நிறுவனமான ` தி பீபுல் ஷோ' மற்றும் நிஹரிகா எண்டெர்டெயின்மண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.
மேலும், DD Next Level திரைப்படம் வருகிற 16-ந்தேதி வெளியாகவுள்ளது.இப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், நேற்று படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைப்பெற்றது, அதில் சந்தானம் சில சுவாரசிய விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
சந்தானம்:
அதில் அவர் தெரிவித்ததாவது," ஆர்யா என்னுடைய உயிர் நண்பன். அவரை எனக்கு கல்லூரியின் கதை திரைப்படத்தில் இருந்து தெரியும். முதல் படத்தில் நடிக்கும் போதே என்னை அவர் காமெடி சூப்பர் ஸ்டார் என அழைப்பார்.
அதே மாதிரி சேட்டை திரைப்படத்தில் காமெடி சூப்பர் ஸ்டார் என்ற தலைப்பை டைட்டில் கார்டில் என்னை கேட்காமலே போட்டுவிட்டார்.நான் லிங்கா திரைப்படத்தில் நடிக்கும் போது ரஜினி சார் என்னை பார்த்து நீதான் காமெடி சூப்பர்ஸ்டாரா? என்று கேட்டார்.
சார் அது ஆர்யா என்ன கேட்காமலே போட்டுட்டான் எனத் தெரிவித்தேன். அதற்கு அவர் 'நீ சொல்லமயா போட்டிருப்பான்' என்றார். என்னை மிகவும் தர்ம சங்கடமான சூழ்நிலையில மாட்டி விட்டுட்டான் ஆர்யா" என்று நகைச்சுவையா தெரிவித்தார்.
English Summary
Arya left me embarrassing situation to superstar Actor Santhanam