கூமாபட்டி தங்கபாண்டி மருத்துவமனையில் திடீர் அனுமதி.!!
koomapatti thangapandi admitted hospital for accident
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள, வத்திராயிருப்பு பகுதியில் அமைந்துள்ள சிறிய கிராமமான கூமாபட்டி தங்கப்பாண்டி என்பவரின் இன்ஸ்டாகிராம் ரீல்சால் பயங்கர டிரென்ட் ஆனது. அதாவது தங்கபாண்டி "ஏங்க.. ஊட்டி, கொடைக்கானல் எல்லாம் போக வேண்டாம்.. நம்ம ஊரு கூமாபட்டிக்கு வாங்க.. சொர்க்க பூமிங்க.. தண்ணிய பாருங்க.. ஏங்க சர்பத் மாதிரி, பவண்டோ, செவன்-அப் மாதிரி இருக்குங்க.. தென் மாவட்டத்தில் கூமாப்பட்டி தனி ஐலேண்டு" என்று பேசி ரீல்ஸ் வெளியிட்டார்.
இந்த ரீலிஸ் மூலம் பிரபலமான இவர் தற்போது தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். மேலும் இவருக்கு விளம்பர வாய்ப்புகளும் கிடைத்து வருகிறது.
இந்த நிலையில் கூமாபட்டி தங்கபாண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதாவது சென்னையில் தனியார் தொலைக்காட்சி படப்பிடிப்பை முடித்துவிட்டு பேருந்தில் கூமாபட்டிக்கு திரும்பியபோது பேருந்து திடீரென பிரேக் பிடித்ததால் விபத்துக்குள்ளானதில் தங்கப்பாண்டிக்கு தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு, ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
English Summary
koomapatti thangapandi admitted hospital for accident