காதலனுடன் இருந்த கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடுமை - ஒடிசாவில் பயங்கரம்.!!
college student harassment in odisa
ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் கடந்த சனிக்கிழமை மதியம் தனது காதலனுடன் பாலிஹர்சந்தி கடற்கரை அருகே உள்ள வனப்பகுதியில் தனிமையில் இருந்தார். அப்போது, அங்கு வந்த இளைஞர்கள் சிலர் மறைந்திருந்து காதல் ஜோடியை தங்கள் செல்போனில் வீடியோ, புகைப்படம் எடுத்தனர்.

இதை பார்த்த மாணவியின் காதலன் அந்த இளைஞர்களிடன் செல்போனில் எடுத்த வீடியோ, புகைப்படத்தை டெலிட் செய்யும்படி கேட்டுள்ளார். அதற்கு அந்த கும்பல் டெலிட் செய்ய பணம் தரவேண்டுமென மிரட்டியுள்ளது. இதற்கு காதல் ஜோடி மறுப்பு தெரிவித்ததனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் கல்லூரி மாணவியின் காதலனை சரமாரியாக தாக்கியது.
தொடர்ந்து கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றது. இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவி நேற்று மாலை போலீசில் புகார் அளித்தார். அதன் படி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மூன்று பேரை கைது செய்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
college student harassment in odisa