வைட்டமின் டி குறைபாடு: எலும்பு பலவீனம் முதல் மனச்சோர்வு வரை ஏற்படும் ஆபத்துகள்...!
Vitamin D deficiency Risks ranging from bone weakness to depression
வைட்டமின் டி சத்து குறைவால் ஏற்படும் பிரச்சனைகள்
எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள்
எலும்புகள் பலவீனமாகி ஒஸ்டியோபரோசிஸ் (Osteoporosis) வரும்.
குழந்தைகளில் ரிக்கெட்ஸ் (Rickets) – கால்கள் வளைந்து போகுதல், எலும்புகள் சரியாக வளராத நிலை.
பெரியவர்களுக்கு ஒஸ்டியோமலேசியா (Osteomalacia) – எலும்புகளில் வலி, பலவீனம்.

தசை பிரச்சனைகள்
தசை வலி, தசை பலவீனம்.
விரைவில் சோர்வு அடைதல்.
அடிக்கடி விழுந்துவிடும் அபாயம் (முதியவர்களுக்கு அதிகம்).
நோய் எதிர்ப்பு சக்தி குறைவு
அடிக்கடி சளி, காய்ச்சல், குளிர், தொற்று நோய்கள் வரும்.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் சிறிய நோய்களும் நீண்ட நாட்கள் நீடிக்கும்.
மனநலம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள்
மனச்சோர்வு (Depression).
கவலை (Anxiety).
நினைவாற்றல் குறைவு.
பிற சிக்கல்கள்
பற்கள் பலவீனமடைதல்.
தலைமுடி அதிகம் உதிர்தல்.
நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் போன்ற நீண்டநாள் நோய்களுக்கு ஆபத்து அதிகரிக்கும்.
தடுக்கும் வழிகள்
சூரிய ஒளி (காலை 7–9 மணி வரை) – தினமும் 20–30 நிமிடம் போதுமானது.
உணவு – மீன், முட்டை மஞ்சள், பால், சீஸ், காளான்.
மருத்துவர் பரிந்துரைபடி வைட்டமின்-டி மாத்திரைகள் அல்லது D3 சொட்டுகள்.
English Summary
Vitamin D deficiency Risks ranging from bone weakness to depression