இன்று வெளியாகிறது பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள்.!!
today plus 2 public exam result released
தமிழகம் மற்றும் புதுவையில், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 3-ந் தேதி தொடங்கி, 25-ந் தேதியுடன் நிறைவு பெற்றது. இந்த தேர்வை பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள், சிறைவாசிகள் என்று மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேர் எழுதினார்கள். தேர்வு முடிந்த பிறகு விடைத்தாள் திருத்தும் பணிகளும் நிறைவு பெற்று மதிப்பெண்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியாகிறது. இதனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் காலை 9 மணிக்கு வெளியிட உள்ளார். மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை https://results.digilocker.gov.in, www.tnresults.nic.in என்ற இணையதளங்களில் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து அறிந்து கொள்ளலாம்.
இதுதவிர தேர்வு முடிவுகள் அந்தந்த பள்ளிகளிலும், மாணவர்கள் தாங்கள் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டு இருந்த செல்போன் எண்ணுக்கும், தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தி வழியாகவும் அனுப்பப்படவுள்ளன.
English Summary
today plus 2 public exam result released