ஆளுநரின் அடாவடிப் போக்கிற்கு அவையைவிட்டே வெளியேற வைத்த முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு - திருமாவளவன்.! - Seithipunal
Seithipunal


தமிழக அரசின் 2023 ஆம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று முன்தினம் ஆளுநர் உரையுடன் தொடங்கியது.

தமிழக அரசால் வழங்கப்பட்ட உரையில் சில பகுதிகளை ஆளுநர் ஆர்.என் ரவி வாசிக்காமல் தவிர்த்தார். இதனை கண்டிக்கும் வகையில் முதல்வர் மு.க ஸ்டாலின் ஆளுநர் உரையில் இடம் பெற்றுள்ள அனைத்து வாக்கியங்களையும் அவை குறிப்பில் சேர்க்க வேண்டும் என தீர்மானம் கொண்டு வந்தார். 

இந்த தீர்மானத்தை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வாசித்துக் கொண்டிருக்கும் பொழுது அவையில் இருந்து ஆளுநர் ஆர்.என் ரவி வெளியேறினார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.

இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இந்த நிலையில் இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், 'ஆளுநரின் அடாவடிப் போக்கிற்கு உடனடி எதிர்வினையாற்றி ஆளுநரை அவையைவிட்டே வெளியேற வைத்த மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களைச் சந்தித்து விசிக சார்பில் பாராட்டினோம். அத்துடன் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்தோம்.' என பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thirumavalavan tweet about MK Stalin


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->