யானை குறித்து சில நோய்ந்த மாடுகள் பேசுகிறது.!! செல்லூர் ராஜூவுக்கு தங்கம் தென்னரசு பதிலடி.!! - Seithipunal
Seithipunal


அதிமுக சார்பில் மதுரையில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடைபெறவுள்ள மாநில மாநாட்டிற்கு அமைக்கப்பட்ட அரங்க அமைப்பு குழு சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்துகொண்டு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். 

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் திருச்சி பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் எதிரி கட்சிகளுக்கு யானை தன் பலத்தை நிரூபித்து காட்டும் என பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த செல்லூர் ராஜூ "அது வயசான யானை. முதலமைச்சர் எழுதிக் கொடுத்ததை படிப்பாரே தவிர அவராக எதுவும் சொல்லத் தெரியாது. குறிப்பில்லாமல் நான் உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்லுவேன் அதுபோன்று முதலமைச்சரால் பேச முடியுமா? எங்கள் பொதுச் செயலாளர் மூன்று மணி நேரம் எந்த குறிப்பு இல்லாமல் செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதில் சொல்லுவார் அவரால் முடியுமா?" என முதலமைச்சர் மு.க ஸ்டாலினை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவின் விமர்சனத்திற்கு தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார். தங்கம் தென்னரசு தனது ட்விட்டர் பக்கத்தில் "திமுக மக்கள் மனம் விரும்பும் பட்டத்து யானை. அது மாட்சிமை

மிக்க ஓர் ஆட்சிக்கான அடையாளம் மட்டுமல்ல; எண்ணிறந்த போர்க்களங்களைக் கண்டு, எதிர்ப்படும் எதிரிகளைப் பந்தாடி வெற்றி வாகை சூடி வரும் போர்யானையும் கூட! சமூக நீதி, சுயமரியாதை, மாநில உரிமை, மொழிப் பற்று ஆகிய நான்கு பலமிக்க கால்களினாலும், மக்கள் நலனுக்கென்றே இயங்கும் உறுதி மிக்க துதிக்கையினாலும்,  நிமிர்ந்து நிலை பெற்று நிற்கும் இந்த யானை, ஆதரவற்றவர்களை அரவணைக்கவும் செய்யும்; ஆணவப்போக்கினால் சீண்டியோரைத் தூக்கி வீசவும் செய்யும். இது ஊரறிந்த உண்மை என்றாலும், யானை என்னும் பேருரியின் ஆற்றலைக் குறித்து சில நோய்ந்த மாடுகள் இன்றைக்கு விசனப்படுவதுதான் விசித்திரமாக இருக்கின்றது" என பதிலடி கொடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thangam Thanarasu response to Sellur Raju criticism


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->