உதகையில் அதிர்ச்சி; தேர்வில் வெற்றிப் பெற வைப்பதாக கூறி மருத்துவ மாணவியை தனியார் ஓட்டலுக்கு கூட்டி சென்று பாலியல் வன்கொடுமை செய்த அரச மருத்துவர்..! - Seithipunal
Seithipunal


நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள பிங்கர் போஸ்ட் பகுதியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இங்கு வட மாநிலத்தைச் சேர்ந்த 22 வயது மதிக்கத்தக்க மருத்துவ மாணவி ஒருவர் பயின்று வருகின்ற நிலையில், அவரிடம் அரசு மருத்துவக் கல்லூரியில் அவசரப் பிரிவில் பணியாற்றி வரும் ஓம் பிரகாஷ் என்ற மருத்துவர் அடிக்கடி அக்கறையாக பேசி வந்துள்ளார். அத்துடன், 'உனக்கு படிப்பில் எந்த டவுட் இருந்தாலும் தன்னிடம் எப்போது வேண்டுமானாலும் கேட்கலாம், நான் சொல்லித்தர தயாராக இருக்கிறேன்' என மாணவியிடம் கூறியுள்ளார்.

தேர்வு நெருங்குவதை யொட்டி குறித்த மாணவியை அழைத்த மருத்துவர் ஓம் பிரகாஷ், தேர்வில் வெற்றி பெற உதவி செய்வதாக கூறி தனியாக அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அந்த மாணவியும் தேர்வுக்கு தேவையான டிப்ஸ் ஏதேனும் வழங்குவார் என நினைத்து அவரை நம்பி சென்றுள்ளார். அனால் குறித்த மருத்துவர், உதகையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலுக்கு மாணவியை அழைத்துச் சென்ற அங்கு மது அருந்தியுள்ளார்.  அப்போது அச்சமடைந்த மாணவியிடம் யூனிவர்சிட்டியில் பேசி தேர்வில் வெற்றி பெற வைப்பதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

சிறிது நேரத்தில் மருத்துவருக்கும் போதை தலைக்கேறியுள்ளது. அப்போது அந்த வடநாட்டு மாணவியிடம் பாலியல் ரீதியாக அத்துமீற முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி மருத்துவரிடம் சண்டையிட்டதாகவும், ஒரு கட்டத்தில், மாணவியை மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. 

ஓட்டல் அறையில் இருந்து சத்தம் கேட்டு அங்கு சென்ற ஓட்டல் ஊழியர்கள் மாணவியின் நிலை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனடியாக போலீசாருக்கு அவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் விசாரணை செய்தபோது போதையில் மருத்துவ மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவியை உதகையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவரிடம் புகாரைப் பெற்றுள்ளனர். அதனை தொடர்ந்து மருத்துவர் மீது மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் அவரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட அரச மருத்துவர் ஓம் பிரகாஷ் சென்னையைச் சேர்ந்தவர் என்றும், ஏற்கனவே 02 திருமணங்கள் ஆன நிலையில் 02 மனைவிகளும் அவரைப் பிரிந்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது. 

தேர்வில் தேர்ச்சியடைய வைப்பதாக கூறி, மருத்துவ மாணவி அரசு மருத்துவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தால் மருத்துவ மாணவ, மாணவியர் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையும் விடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Government Doctor Rapes Medical Student After Luring Her to Private Hotel with Promise of Ensuring Her Success in Exams


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!


செய்திகள்



Seithipunal
--> -->