கரூர், ஈரோடு உள்ளிட்ட நான்கு மாவட்ட எஸ்.பி.க்கள் இடமாற்றம்; புதிய எஸ்.பி.க்கள் நியமனம்; தேர்தல் ஆணையம் நடவடிக்கை..! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி, மேற்குவங்கம் மற்றும் அசாம் ஆகிய ஐந்து சட்டமன்றங்களுக்கு இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் தேர்தல் தேதிகளை அறிவித்துள்ளது. இதனையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் நேற்று (15ஆம் தேதி) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் முதற்கட்டமாக, கரூர் உட்பட நான்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டிற்கு வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்று, வரும் மே நான்காம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 30ஆம் தேதி முதல் தொடங்குகிறது. நேற்று தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான நொடியில் இருந்து ஐந்து மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதனைத் தொடர்ந்து மாநிலங்களில் தேர்தல் ஆணையம் தனது பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. 

அதன்படி, தமிழகத்தில், கரூர், ஈரோடு, நாகப்பட்டினம் மற்றும் ஈரோடு ஆகிய நான்கு மாவட்டங்களின் எஸ்.பிக்களை இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து, கரூர் மாவட்டத்திற்கு புதிய எஸ்.பியாக டி.என். ஹரிகிரண் பிரசாத், ஈரோடு மாவட்ட எஸ்.பி.யாக கிரண் ஸ்ருதி, நாகப்பட்டினம் மாவட்ட எஸ்.பி.யாக சுஜித் குமார் மற்றும் விருதுநகர் மாவட்ட எஸ்.பியாக என். ஸ்ரீநாதா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Transfers Superintendents of Police in Four Districts Including Karur and Erode


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!


செய்திகள்



Seithipunal
--> -->