'நம் மண்ணின் கதைகள் அனைவரையும் சென்று சேர வாழ்த்துகிறேன்.' எழுத்தாளர் தமிழ்செல்வனுக்கு 2025 சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் இலக்கியத்திற்கு வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றாக 'சாகித்ய அகாடமி விருது' கருதப்படுகிறது. நாட்டின் அதிகாரப்பூர்வமான 24 மொழிகளில், கவிதை, சிறுகதை, நாவல், இலக்கிய ஆய்வு படைப்புகளில் சிறந்த படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு, அந்தந்த மொழிகளில் எழுத்தாளர்கள் இந்த விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

அதன்படி, 2025ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் தமிழ்ச்செல்வனுக்கு 'தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்' என்ற புத்தகத்துக்காக 'சாகித்ய அகாடமி விருது' அறிவிக்கப்பட்டுள்ளது.

சாகித்ய அகாடமி விருது வென்றுள்ள தமிழ்ச்செல்வனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

''தான் எழுதும் நிலப்பரப்பின் கருப்பொருட்களை எல்லாம் கதையின் ஓட்டத்தில் இயல்பாகப் பின்னிப் பிணைக்கும் எழுத்தாளர் 'தோழர்' ச. தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு #SahityaAkademi விருது அறிவிக்கப்பட்டிருப்பதற்கு எனது பாராட்டுகள்!

தாமதப்படுத்தினாலும், இறுதியில் சரியான கைகளில் சாகித்திய சாகித்ய அகாடமி சேர இருப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.

தங்களது படைப்புகள் மேலும் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு, நம் மண்ணின் கதைகள் அனைவரையும் சென்று சேர வாழ்த்துகிறேன்!'' என்று குறிப்பிட்டுள்ளார்.

எழுத்தாளர் தமிழ்செல்வன்

இவர், 1954 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரத்தில் சண்முகம் - சரஸ்வதி தம்பதிக்கு மகனாக பிறந்தவர். சிறுகதைகள், கட்டுரைகள், சிறு நூல்கள், சிறார் இலக்கியம் என பல்வேறு படைப்புகளை உருவாக்கியுள்ளார். எழுத்தாளர் தமிழ்ச்செல்வன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கத்தின் கௌரவ தலைவராகவும் உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chief Minister MK Stalin extends congratulations to writer Tamilselvan on the announcement of the 2025 Sahitya Akademi Award


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!


செய்திகள்



Seithipunal
--> -->