ஒட்டுமொத்தமாக தடை.?! உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.! - Seithipunal
Seithipunal


தலைநகர் டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை விதித்து, தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பு சரியானது தான் என்று, உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை அளித்துள்ளது.

தலைநகர் டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. வாகனங்கள் வெளியிடும் புகை காரணமாக நகரம் முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்த காலங்கள் எல்லாம் உண்டு.

மேலும், இதனை கட்டுப்படுத்த டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது. இந்த நிலையில், தலைநகர் டெல்லியில் கொரோனா நோய்த்தொற்று குறித்த அச்சம் காரணமாக, காற்றின் தரம் மோசமாக இருப்பதால் பட்டாசு வெடிக்க தடை கோரி தேசிய தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரணை செய்த பசுமை தீர்ப்பாயம், தலைநகர் டெல்லியில் கொரோனா நோய்த்தொற்று காலத்தில் பட்டாசு வெடிக்க தடை விதித்து தீர்ப்பளித்தது.

பசுமை தீர்ப்பாயத்தின் இந்த தீர்ப்பு குறித்து, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், பசுமை தீர்ப்பாயத்தின் இந்த முடிவு சரியான முடிவு தான் என்று, உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

மேலும், தலைநகர் டெல்லியில் காற்று மாசு குறைவாக உள்ள பகுதிகளில் ஏற்கனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அனுமதியுடன் பட்டாசுகளை விற்பது தொடர்பாக தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கு, மேலும் விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று, உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

அதே சமயத்தில், ஒட்டுமொத்தமாக பட்டாசுகளுக்கு தடை விதிக்க வில்லை என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

supreme court say about creekers case issue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->