பரபரப்பாக நடந்த இலங்கை அதிபர் தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொண்ட வேட்பாளர்.! - Seithipunal
Seithipunal


இலங்கையில் 8-வது அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று நடந்தது. இந்த தேர்தலில் முடிவில் சுமார் 81.52% வாக்குகள் பதிவாகின. இதையடுத்து நள்ளிரவு முதலே வாக்குகள் எண்ணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதிபர் தேர்தலில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 35 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

தற்போதைய நிலவரப்படி, இலங்கை பொதுஜன முன்னணி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே 43,15,506 வாக்குகளுடன் சுமார் 50.46% சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெறும் நிலையில் உள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட புதிய ஜனநாயக  முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 37,28,789 வாக்குகளுடன் சுமார் 43.6% சதவீத வாக்குகளை பெற்று தோல்வி பெறும் நிலையில் உள்ளார். 

 கோத்தபய ராஜபக்சேவுக்கு சிங்களர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் அதிக வாக்குகள் பதிவாகியுள்ளன. அதேபோல் தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மாகாணத்தில் சஜித்க்கு அதிக வாக்குகள் பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி தேவையான 50% வாக்குகளை கடந்த நிலையில் பொதுஜன முன்னணி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். இலங்கையின் 8- வது அதிபராக கோத்தபய ராஜபக்சேவின் வெற்றியை, தேர்தல் ஆணையம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்தநிலையில், புதிய ஜனநாயக முன்னணி சஜித் பிரேமதாச இலங்கை மக்களின் தீர்ப்பை ஏற்று தோல்வியை ஒப்புக்கொள்வதாகவும் அறிவித்தார்.

அதேபோல் இலங்கையின் புதிய அதிபராக வெற்றி பெற்றுள்ள கோத்தபய ராஜபக்சேவை பாராட்டுகிறேன் அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

srilanka sajith admitting his defeat


கருத்துக் கணிப்பு

ஜனவரி மாதத்தில் பள்ளி, கல்லூரிகள்.,
கருத்துக் கணிப்பு

ஜனவரி மாதத்தில் பள்ளி, கல்லூரிகள்.,
Seithipunal