ஒன்றரை கோடி ரூபாய் கேட்டு மிரட்டல்.! எஸ் பி வேலுமணியின் சகோதரரர் பரபரப்பு புகார்.!
sp velumani brother anbarasan
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியின் வீடு உள்ளிட்ட 50 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். இதில் பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றி உள்ளதாக சொல்லப்படுகிறது.

இது குறித்து அதிமுக தரப்பில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக அரசு இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடாமல், தமிழக மக்களின் நலன் கருதி செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின், அதிமுக ஆட்சி தொடர முக்கிய காரணம் நான் தான் என்பதால், திமுகவிற்கும், திமுக தலைவருக்கும் என்மீது கோபம், இதன் காரணமாகவே பழிவாங்கும் நோக்கில் இந்த லஞ்ச ஒழிப்பு சோதனை நடந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மாநகராட்சி ஒப்பந்ததாரர் திருவேங்கடம் மீது அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி அவர்களின் சகோதரர் அன்பரசன் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

அண்மையில், எஸ் பி வேலுமணி அவர்களின் சகோதரர் அன்பரசன் மீது திருவேங்கடம் புகார் அளித்திருந்த நிலையில், தற்போது திருவேங்கடம் மீது அன்பரசன் எதிர் புகார் அளித்துள்ளார். அவரின் அந்த புகார் மனுவில், தன்னிடம் மாநகராட்சி ஒப்பந்ததாரர் திருவேங்கடம் ஒன்றரை கோடி ரூபாய் கேட்டு மிரட்டுவதாக அன்பரசன் தெரித்துள்ளார்.
English Summary
sp velumani brother anbarasan