சாவர்க்கர் vs திப்பு சுல்தான் - கத்திக்குத்து, பதற்றம்.! சிவமோகாவில் 144 தடை உத்தரவு.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் பாஜக சார்பாக ஓட்டப்பட்ட சுதந்திரதின விளம்பர படங்களில், இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் புகைப்படம் இல்லாதது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், சிவமோகா என்ற இடத்தில் பாஜகவின் விளம்பர பலகையில் சாவர்க்கரின் புகைப்படத்தை அகற்றிவிட்டு, திப்பு சுல்தான் புகைப்படத்தை ஒட்ட ஒரு தரப்பினர் முயன்றனர்.

அவர்களை காவல்துறையினர் தடுக்க முயற்சி செய்தபோது இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது.

மேலும், நிலைமை கைமீறி சென்றதால், காவல்துறையினர் தடியடி நடத்தி விரட்டி அடித்தனர். இந்தக் கலவரங்களுக்கிடையே இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு, படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து அந்த பகுதியில் பதற்றம் நிலவுவதால், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மோதல் கலவரம் தொடர்பாக தற்போது வரை மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

shivmogga 144 rule


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->