அதிகாலையிலேயே ஏர்போர்ட்டில்..!! அசோக் குமார் கைதானது எப்படி.? வெளியான பரபரப்பு பின்னணி.!! - Seithipunal
Seithipunal


அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கி தருவதாக பணமோசடி செய்ததாக எழுந்த புகாரில் தற்போதைய திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி கைது அமலாக்கத்துறையால் செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த ஜூன் மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை சோதனையின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 இது குறித்து விசாரணைக்காக நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை 4 முறை செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாருக்கு சம்மன் அனுப்பியது. ஆனால் தனக்கு இதயத்தில் அடைப்பு இருப்பதாகவும், அதற்காக வீட்டில் இருந்து ஆயுர்வேத சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறி விசாரணைக்காக நேரில் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார்.

இந்த நிலையில் சிறையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலக்கத்துறை அதிகாரிகள் உச்ச நீதிமன்றம் மற்றும் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை செய்தனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் விசாரணை காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே இந்த வழக்கில் தொடர்புடைய அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரை கேரளாவில் வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் அமலாக்கத்துறை விசாரணையில் இருந்து தப்பிப்பதற்காக வெளிநாடு தப்பிச் செல்ல உள்ளதாக தகவல் வெளியான நிலையில் அனைத்து விமான நிலையங்களும் அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டார்.

இந்த நிலையில் தான் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் கேரளாவில் உள்ள கொச்சி விமான நிலையம் வழியாக வெளிநாட்டிற்கு தப்பி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் கொச்சி விமான நிலையம் சென்ற போது விமான நிலைய அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு விமான நிலைய அதிகாரிகள் அளித்த தகவலின் பெயரில் இன்று அதிகாலை கொச்சி விமான நிலையத்திற்கு விரைந்த அமலாக்கத் துறை அதிகாரிகள் அசோக்குமாரை கைது செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சட்டப்படி கேரள நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் நீதிமன்றத்தின் உத்தரவின்படி தமிழகத்திற்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இன்று அல்லது நாளைக்குள் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் சென்னை அழைத்து வர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

SenthilBalaji brother AshokKumar was arrested at Kochi airport early today


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->