'முதல்வராக என்னுடைய வாய்ப்பை எடப்பாடி பழனிசாமி கொடுத்து, நான் தான் பொதுச்செயலாளராக முன்மொழிந்தேன்'; செங்கோட்டையன்..!
Sengottaiyan says that Edappadi Palaniswami gave me the opportunity to become the Chief Minister
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், நடிகர் விஜய் முன்னிலையில் நேற்று தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்து பரபரப்பை ஏற்படுத்தினார். தவக-வில் மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இன்று ஆவர், தனது சொந்த ஊரான கோபி செட்டிபாளையத்தில் ஆதரவாளர்கள் மத்தியில் பேசும் போது கூறியதாவது: ஆட்சி செய்த கட்சியே ஆள வேண்டுமா..? புதிய தலைமுறை உருவாக்க வேண்டாமா...? மக்கள் பணியாற்றுவதற்கு புதிய தலைமுறை உருவாக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், படத்தில் நடித்தால் விஜய்க்கு ஆண்டுக்கு 500 கோடி ரூபாய் கிடைக்கும். ஆனால், அவர் அதை தேவையில்லை எனக் கூறிவிட்டு மக்கள் பணியாற்ற வந்துள்ளார். தூய்மையான ஆட்சி, மக்களாட்சி, தமிழகத்தை அமைதிப் பூங்காவாக மாற்றவுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், என்னிடம் ஏன் இன்னும் ஜெயலலிதா படத்தை வைத்துள்ளீர்கள் என கேட்டனர். இங்கு தான் ஜனநாயகம் உள்ளது. யார் படத்தை வேண்டுமானாலும் வைத்து கொள்ளலாம். வேறு படத்தை வைத்தால் தான் சிரிப்பீர்கள். ஆனால், எங்களை போன்றவர்கள் எந்த படத்தை வைத்தாலும் அரவணைத்து செல்லும் தலைவராக விஜய் இருப்பார் என்று கூறியுள்ளார்.
தொறந்து அவர் பேசுகையில் குறிப்பிட்டுள்ளதாவது: நாங்கள் தர்மத்தை காக்கிறோம் என்றும் எல்லோரும் எல்லாம் பெற வேண்டும் என்றதோடு, ஜாதி மத பேதமற்ற, ஊழல் அற்ற ஆட்சி அமைக்க சுதந்திரமாக பணியாற்றலாம் என என்னை அரவணைத்து சொன்னார் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், உங்களை போன்ற இளைஞர்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. ஜெயலலிதாவுக்கு வழிகாட்டியாக இருந்து பணியாற்றினேன். எம்ஜிஆர் பயணம் மேற்கொண்ட போது அவருடன் இருந்து பணியாற்றினேன். மூன்றாவது தலைமுறையாக விஜய்க்கு வழிகாட்டியாக பணியாற்றுவேன் என்று செங்கோட்டையன் ஆதவலர்கள் மத்தியில் கூறியுள்ளார்.

அத்துடன், எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக, முதல்வராக நான் முன்மொழிந்தேன் என்றும் , தனக்கு கிடைத்த வாய்ப்பை அவரை ஏற்றுக் கொள்ளுமாறு கூறியதாக தெரிவித்துள்ளார். ஆனால், அவரிடம் சமத்துவம், மனிதநேயம் இல்லை. 50 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் என்னுடைய உழைப்பு அனைவருக்கும் தெரியும். சாதாரண தொண்டராக கூட இருக்கக்கூடாது என என்னை நீக்கினார். உடன் இருப்பவர்களை நீக்கினார் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், துக்கம் விசாரிக்க சென்ற போது என்னை சந்தித்தவரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் என்றும், இவர் நாளை ஆட்சிக்கு வந்தால் என்னவாகும் என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும் என்றும், விஜய் தான் ஆட்சிக்கு வரப்போகிறார். டிசம்பர் மாதத்துக்குள் தவெக கூட்டணி வலிமையாகும் என்றும், பல முன்னாள் அமைச்சர்களும் தவகவிற்கு வருவார்கள் என்று கூறியுள்ளார்.
English Summary
Sengottaiyan says that Edappadi Palaniswami gave me the opportunity to become the Chief Minister