நாங்க அனைவருக்கும் ₹1,500 கொடுத்திருப்போம்! திமுகவை கோர்த்து விட்ட செங்கோட்டையன்! - Seithipunal
Seithipunal


கடந்த சட்டமன்ற பொது தேர்தலில் அதிமுக ஆட்சி அமைந்திருந்தால் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் 1500 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை வழங்கி இருப்போம் என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரையின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தில் பாதி குடும்ப தலைவிகளுக்கு கூட மகளிர் உரிமைத் தொகை வழங்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து பேசி அவர் "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ரூ.1,000 அல்ல ரூ.1,500, 6 சிலிண்டர் இலவசம் என சொன்னோமா? இல்லையா?

நாங்கள் ஆட்சிக்கு வந்திருந்தால் அதை நிறைவேற்றிக் காட்டி இருப்போம். ஆனால் இவர்கள் ஆயிரம் ரூபாய் கூறிவிட்டு அதையும் பாதிப்பிற்கு தான் கொடுத்துள்ளனர். அதிமுக ஆட்சிக்கு வந்திருந்தால் சொன்னதை போல அனைவருக்கும் 1500 மகளிர் உரிமைத் தொகை வழங்கி இருப்போம்" என பொதுக்கூட்ட மேடையில் பேசியுள்ளார். மகளிர் உரிமைத் தொகை வழங்குவதில் பல்வேறு குளறுபடிகள் அரங்கேறி வரும் நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் இவ்வாறு பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sengottaiyan said AIADMK govt would have given rs1500


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->