செங்கோட்டையன் பேட்டி... பாஜக ரியாக்ஷன் என்ன?
Sengottaiyan ADMK Edappadi Palaniswami BJP Nayinar
அதிமுகவில் இருந்து விலகிச் சென்றவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்ற தனது கோரிக்கையை பத்து நாள்களுக்குள் ஏற்றுக்கொள்ளாவிட்டால், எடப்பாடி பழனிசாமியின் பிரசாரங்களில் பங்கேற்க மாட்டேன் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களை சந்தித்து தெரிவிக்கையில், தன்னைச் சேர்ந்த பலரும் மீண்டும் அதிமுகவில் இணைவதற்குத் தயாராக உள்ளனர். ஆனால், அவர்கள் அனைவரையும் உடனடியாக ஒருங்கிணைத்து கட்சியில் சேர்க்க வேண்டும் என்பது தான் தனது கோரிக்கை. பத்து நாளுக்குள் இந்த முயற்சி தொடங்கப்படாவிட்டால், ஒருங்கிணைப்பு பணிகளை நானே முன்னெடுப்பேன். அதிமுக வளர்ச்சி மற்றும் வலிமைக்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டிய அவசியம் உள்ளது எனவும் குறிப்பிட்டார்.
இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்தாவது, "அ.தி.மு.க.வில் பிரிந்திருப்பவர்களை மீண்டும் இணைக்க செங்கோட்டையன் முனைந்திருப்பது வரவேற்கத்தக்கது. அவர் மேற்கொண்டுள்ள முயற்சி நல்லதே. ஆனால், அ.தி.மு.க. உட்கட்சி விவகாரங்களில் தலையிட பாஜக விருப்பமில்லை.
அதே நேரத்தில், அ.தி.மு.க. ஒருங்கிணைப்புக்கு தேவைப்பட்டால் நாங்கள் கலந்துரையாட தயாராக இருக்கிறோம். அனைவரும் ஒன்றுபட்டால் தி.மு.க. ஆட்சியை வீழ்த்துவது சாத்தியமே.
அரசியலில் எதுவும் நிரந்தரம் இல்லை. கடைசி நேரத்திலும் கூட மாற்றங்கள் ஏற்படலாம் என்பதை மறக்கக்கூடாது என்றார்.
English Summary
Sengottaiyan ADMK Edappadi Palaniswami BJP Nayinar