செங்கோட்டையன் முழுமையாக மனம் திறக்கவில்லை! பாஜகவின் சதியாக இருக்குமோ என்று தோன்றுகிறது- திருமாவளவன்
Sengottaiyan has not fully opened his mind It seems like it might be a conspiracy by the BJP Thirumavalavan
சென்னை: இன்று முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான ஆசிரியர் தினத்தையும், இஸ்லாமிய மக்களுக்கு மிலாடி நபி தினத்தையும் முன்னிட்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.
மதுரையில் போக்குவரத்து கழகத்தில் பணியாற்றிய ராமகிருஷ்ணன் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, அவர் தூக்கில் தொங்கவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த மரணம் தற்கொலை அல்ல, கொலை என சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து, அவரது மனைவி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்த நிலையில், நீதிமன்ற வழிகாட்டுதலின் அடிப்படையில் இன்று பிரேத பரிசோதனை நடைபெறுகிறது.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறிய விடுதலை சிறுத்தைகள் கட்சி, “இந்த மரணத்தில் கொலைக்கான முகாந்திரம் இருப்பது தெரிகிறது. வழக்கமான காவல்துறை விசாரணைக்கு பதிலாக, சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு ஆணை பிறப்பிக்க வேண்டும்” என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. மேலும், குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கி, குடும்ப உறுப்பினருக்கு வேலைவாய்ப்பு தர வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.
இதோடு, மத்திய அரசின் சமீபத்திய ஜி.எஸ்.டி. மறுசீரமைப்பு அறிவிப்பு குறித்து கட்சி விமர்சனம் செய்துள்ளது. “28 சதவீதமாக இருந்த வரியை 10 சதவீதம் உயர்த்தியிருப்பதால், சிறு, குறு, நடுத்தர தொழில் செய்யும் வணிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் பெரிய பலன் ஏற்படாது” என கட்சி தெரிவித்துள்ளது.
அத்துடன், அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ள ஒன்றிணைப்பு கோரிக்கை குறித்து, “அது அவர்களின் உட்கட்சி விவகாரம். இருந்தாலும், பெரியார் இயக்கத்தின் கோணத்தில் அதிமுகவை மதிக்கிறோம்” என்று கட்சி அறிக்கையில் கூறியுள்ளது.
English Summary
Sengottaiyan has not fully opened his mind It seems like it might be a conspiracy by the BJP Thirumavalavan