ஆதவ் அர்ஜுனா பேச்சு சர்ச்சை!பிழைக்கவும் ரஜினி, பழிக்கவும் ரஜினி! விஜய்க்கு ஓட்டு போடமாட்டோம்! கொந்தளித்த ரஜினி ரசிகர்கள்! - Seithipunal
Seithipunal


தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் சாதி வாரி கணக்கெடுப்பை கோரி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தவெக நிர்வாகிகள் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய ஆதவ் அர்ஜுனா, நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பயணம் குறித்து தெரிவித்த கருத்துகள் தற்போது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அவர் பேசியபோது,“எம்.ஜி.ஆருக்குப் பிறகு தமிழ்நாட்டில் ஒரு பெரிய தலைவராக வர வேண்டும் என்று ரஜினிகாந்த் நினைத்தார். அரசியலில் சிஸ்டத்தை மாற்ற வேண்டும் என்ற எண்ணமும் அவருக்கு இருந்தது. ஆனால் திமுக குடும்பம் கொடுத்த மிரட்டல்களால் அவர் அரசியலுக்கு வர முடியவில்லை. இன்று அவர் அந்த குடும்பம் தயாரிக்கும் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இது ரஜினியை விமர்சிப்பதற்காக அல்ல; ஆனால் அரசியலில் அந்த மனவலிமை விஜய்க்கு உள்ளது என்பதை கூறுகிறேன்” என்று தெரிவித்தார்.

இந்தக் கருத்து சமூக வலைதளங்களில் வைரலாகி, ரஜினிகாந்த் ரசிகர்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து வேலூர் மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர் மன்ற தலைவர் ரவி கடுமையாக பதிலளித்துள்ளார். அவர் கூறியதாவது:“ரஜினிகாந்த் மிரட்டல்களுக்கு அஞ்சுபவர் அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். கொரோனா காலத்தில் கூட்டங்கள் நடத்துவது மக்களின் உயிருக்கு ஆபத்தாக இருக்கும் என்பதால் தான் அவர் அரசியலில் இருந்து விலகினார். அது பயத்தால் எடுத்த முடிவு அல்ல; மக்களின் நலனை கருத்தில் கொண்ட முடிவு.

தன்னை நம்பி வரும் மக்களின் உயிரை ஆபத்தில் ஆழ்த்தும் அரசியல் செய்யாமல், விமர்சனங்களையும் பழிகளையும் தாங்கி கொண்டு விலகியவர் ரஜினி. கூட்டம் சேர்ப்பவர் எல்லாம் தலைவன் ஆகிவிட முடியாது. அதனால் தான் அவர் இன்னும் பலரால் நிரந்தர தலைவராக மதிக்கப்படுகிறார்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சமூக வலைதளங்களில் பல ரஜினி ரசிகர்கள் “பிழைக்கவும் ரஜினி, பழிக்கவும் ரஜினி” என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி ஆதவ் அர்ஜுனா மற்றும் விஜய்யை விமர்சித்து பதிவுகள் செய்து வருகின்றனர்.

இந்த விவகாரம் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரிய விவாதத்தை கிளப்பியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Adhav Arjuna speech controversy Long live Rajini take revenge Rajini We will not vote for Vijay Rajini fans are upset


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->