ஈரான் கட்டுப்பாட்டை மீறி ஹார்முஸ் ஜலசந்தி கடந்த கப்பல் – ஈரானை ஏமாற்றிய இந்திய மாலுமி.. மும்பை வந்து சேர்ந்தது எப்படி? - Seithipunal
Seithipunal


மத்திய கிழக்கு பகுதியில் ஈரான்–இஸ்ரேல் மோதல் காரணமாக கடல் போக்குவரத்தில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், இந்திய மாலுமி தலைமையிலான ஒரு கச்சா எண்ணெய் கப்பல் தந்திரமான முறையில் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

லைபீரிய கொடி கட்டப்பட்ட “ஷென்லாங் சூயஸ்மேக்ஸ்” என்ற கப்பல் இன்று காலை மும்பை துறைமுகத்தை வந்தடைந்தது. இந்த கப்பல் சுமார் 1.35 லட்சம் டன் கச்சா எண்ணெயை ஏற்றி வந்ததாக கூறப்படுகிறது. இந்த எண்ணெய் மும்பை மஹூல் சுத்திகரிப்பு நிலையத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்.

மார்ச் 1ஆம் தேதி சவுதி அரேபியாவில் இருந்து புறப்பட்ட இந்த கப்பல், போர் சூழ்நிலை நிலவி வரும் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியை கடக்கும்போது, இந்திய மாலுமி சில முக்கிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்ததாக கூறப்படுகிறது.

தாக்குதலிலிருந்து தப்பிக்க,

  • கப்பலில் இருந்த அனைத்து விளக்குகளையும் அணைத்தது,

  • கப்பலின் நகர்வுகளை காட்டும் AIS (Automatic Identification System) கருவியை நிறுத்தியது,

  • கம்பியில்லா தொடர்பு சாதனமான டிரான்ஸ்பாண்டர்களையும் செயலிழக்கச் செய்தது

என்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் கப்பலின் இருப்பிடத்தை கண்காணிக்க முடியாத நிலை உருவாகி, எதிரிகளின் கவனத்திற்கு வராமல் கப்பல் பயணித்ததாக கூறப்படுகிறது.

சர்வதேச கடல்சார் விதிகளின்படி AIS கருவி எப்போதும் செயல்பாட்டில் இருக்க வேண்டும். ஆனால் போர் அல்லது பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கும் சூழலில் கப்பலின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அதை தற்காலிகமாக நிறுத்த அனுமதி வழங்கப்படுகிறது. எனினும் இது மற்ற கப்பல்களுடன் மோதல் போன்ற விபத்துகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், இதே வழியாக இந்தியா நோக்கி வந்த “மயூரி நாரி” என்ற தாய்லாந்து கப்பல் மீது ஈரான் படையினர் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த தாக்குதலில் இரண்டு இந்திய மாலுமிகள் உயிரிழந்ததாகவும், ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த சூழலில், ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த ஷென்லாங் கப்பலின் பயணம் இந்திய மாலுமியின் தந்திரமான முடிவால் சாத்தியமானது என கூறப்படுகிறது. இந்த சம்பவம் தற்போது சர்வதேச கடல் போக்குவரத்து வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The ship that crossed the Strait of Hormuz without Iranian control the Indian sailor who deceived Iran How did he reach Mumbai


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->