பழனியில் மொட்டையுடன் ஏ.ஆர் முருகதாஸ் சிறப்பு வழிபாடு...! மதராஸி வெற்றிக்காக...
AR Murugadoss baldness performs special worship service Palani success Madrasi
கத்தி,துப்பாக்கி போன்ற வெற்றி படங்களை இயக்கிய 'ஏ.ஆர். முருகதாஸ்' இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த 'மதராஸி' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.

இதைத் தொடர்ந்து,படத்தின் வெற்றி குறித்த பாராட்டுக்களை பெற்ற முருகதாஸ், இன்று பழனியில் சிறப்பு வழிபாடு செய்தார்.அங்கு அதிகாலையிலேயே அடிவாரத்துக்கு வந்த முருகதாஸ் மொட்டையடித்து மலைக்கோவிலில் தண்டாயுதபாணி சுவாமியை மனமுருக வழிபட்டார்.
அதன் பின்னர் திருஆவினன்குடி கோவிலில் 3-ம் படை வீடிலும் வழிபட்டார்.இதைத் தொடர்ந்து,மொட்டை அணிந்திருந்த முருகதாஸை பெரும்பாலான பக்தர்கள் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை.
இருப்பினும், சிலர் அவரை அடையாளம் கண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டு மகிழ்ந்தனர்.
English Summary
AR Murugadoss baldness performs special worship service Palani success Madrasi