மோகன்லால் நடித்த ஸிருதயப்பூர்வம் – உலகளவில் ₹50 கோடி வசூல்
Mohanlal starrer Sirudhayapurvam 50 crore worldwide collection
திரைவிமர்சன உலகில் பெரிய வரவேற்பை பெற்றுள்ள ஸிருதயப்பூர்வம் படம், வசூல் சாதனையில் இடம்பிடித்துள்ளது.
சத்யன் அந்திக்காட் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். சங்கீதா, சித்திக் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அகில் சத்யன் வசனம் எழுதியுள்ள இப்படத்திற்கு ஐஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். படம் ஒரு ஃபீல் குட் கதைமாந்திரத்துடன் வந்ததால், பார்வையாளர்கள் மனதில் நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
வெளியான சில நாட்களிலேயே மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இப்படம், உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனை நடிகர் மோகன்லாலும் தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
மலையாள சினிமாவில் அதிக வசூல் செய்த படங்களின் தொடக்க வரிசையில் ஸிருதயப்பூர்வம் தற்போது 3-வது இடத்தைப் பிடித்துள்ளது.
English Summary
Mohanlal starrer Sirudhayapurvam 50 crore worldwide collection