வயிற்றுப்போக்கு வந்த பின் கவலை வேண்டாம்...! சில வழிகள் போதும்!
Dont worry after getting diarrhea Just few ways are enough
வயிற்றுப்போக்கு வந்தபின் தடுக்கும் முறை :
நாம் குடிக்கும் தண்ணீரைக் குறைந்தது 5 நிமிடங்களுக்குக் கொதிக்க வைத்து, ஆற வைத்துக் குடிக்க வேண்டும்.
வீட்டிலிருக்கும் குடிதண்ணீர்த் தொட்டியில் சரியான அளவில் குளோரின் கலந்து பயன்படுத்தினால் நோய்க் கிருமிகள் வராது.
ஒவ்வொரு வீட்டிலும் சமையலறை சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். சுத்தமான பாத்திரங்களில் சுகாதாரமான முறையில் உணவைச் சமைக்க வேண்டும்.
நன்கு வேகவைத்த உணவை உண்ண வேண்டும்.

கோடையில் சமைத்த உணவு வகைகள் சீக்கிரம் கெட்டுவிடும் என்பதால், சுடச்சுடச் சாப்பிட்டுவிட வேண்டும். நாள் கணக்கில் சேமித்துவைத்துச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
உணவு வகைகளை ஈக்கள் மொய்க்காமலும் எறும்புகள் வராமலும், பல்லி பூச்சிகள் விழுகாதபடி மூடி பாதுகாக்க வேண்டும்.
குழந்தைகளுக்குப் பாட்டிலில் பால் கொடுக்கும்போது சுத்தமாக கொடுக்கவேண்டும். ஒவ்வொரு முறையும் ஃபீடிங் பாட்டில், நிப்பிள், பாட்டில் மூடி ஆகிய மூன்றையும் சுத்தமாகக் கழுவி, குறைந்தது ஐந்து நிமிடங்களுக்குத் தண்ணீரில் கொதிக்கவைத்த பிறகுதான் பயன்படுத்த வேண்டும்.
அசுத்தமான வெளியிடங்களிலும், சாலையோரக் கடைகளிலும் திறந்தவெளி உணவகங்களிலும் அடிக்கடி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
தெருக்களிலும், மக்கள் நடமாடும் எந்த இடத்திலும் மலம் கழிக்கும் பழக்கம் இருத்தல் வேண்டும். குளத்தங்கரை, ஆற்றங்கரை, நதிக்கரை ஓரங்களில் மலம் கழிக்கக் கூடாது.
இருப்பினும் மருத்துவரை உடனடியாக அணுகவும். அவரின் பரிந்துரைப்படி மருத்துவ முறையை பின்பற்றுதல் நலம்.
English Summary
Dont worry after getting diarrhea Just few ways are enough