Healthy Smile Secret ...! பல் சொத்தையை பாதுகாக்கும் முறைகள்...! இதோ...!
Healthy Smile Secret Methods to protect tooth decay Here it is
பல் சொத்தை சிகிச்சை மற்றும் பாதுகாப்பு முறைகள்
பல் சொத்தை சிகிச்சைகள் :
முப்பது ஆண்டுகளுக்கு முன்புவரை பல் சொத்தையாகிவிட்டால், ஒருவித சிமெண்டைக் கொண்டு சொத்தையை மூடுவார்கள் அல்லது அந்தப் பல்லை நீக்கிவிடுவார்கள். இப்போது இந்த நிலைமை மாறியுள்ளது. எந்த அளவுக்குச் சொத்தை பல்லில் பரவியுள்ளது என்பதை எக்ஸ்-ரே எடுத்துப் பார்ப்பதன் மூலம் அறியலாம். பல்லின் எந்தப் பகுதி பாதிக்கப்பட்டுள்ளது என்பதைப் பொறுத்துச் சிகிச்சை மாறும்.
எனாமல், டென்டைன் வரைக்கும் சொத்தை இருந்தால் ஃபில்லிங் எனப்படும் நிரப்புதல் சிகிச்சை போதுமானது. சொத்தையானது பல் கூழ்வரை சென்றிருந்தால், வேர் சிகிச்சை என்று அழைக்கப்படும் ரூட் கனால் சிகிச்சை செய்யப்பட வேண்டும்.

பல் சொத்தை பாதுகாப்பு முறைகள்:
சிறு வயதில் இருந்தே குழந்தைகளுக்கு பல்லை சுத்தமாக வைத்துக் கொள்வது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
தினமும் இரண்டு முறை கட்டாயம் பல் துலக்க வேண்டும்.
மாதம் ஒரு முறை பிரஷ்ஷை மாற்ற வேண்டும்.
பல்லின் தன்மைக்கு தகுந்த பிரஷ்ஷை தேர்வு செய்வதும் அவசியம்.
பல் இடுக்குகளில் உணவுப் பொருட்கள் சேராமல் பாதுகாக்க வேண்டும்.
குளிர்ச்சியான பதார்த்தங்கள் அடிக்கடி சாப்பிடுவதை தவிர்க்கவும்.
மவுத் வாஷ் பயன்படுத்தியும் பல்லை சுத்தமாக வைத்துக் கொள்ளலாம்.
இனிப்புகள் சாப்பிட்டால் கண்டிப்பாக பல்லை சுத்தம் செய்ய வேண்டும்.
பிரச்னையே இல்லாவிட்டாலும் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பல் மருத்துவரிடம் காண்பித்து பல் ஆரோக்யத்தை பாதுகாக்க வேண்டும்.
கால்சியம் உள்ள உணவு முறையை பின்பற்றுவதன் மூலம் பல்லின் வலி மையை பாதுகாக்க முடியும்.
English Summary
Healthy Smile Secret Methods to protect tooth decay Here it is