புரோக்கர்கள் ஏமாற்று வேலை அம்பலம்..! சேலத்தில் திருமண மோசடி அதிர்ச்சி சம்பவம்...!
Brokers scam Shocking incident marriage fraud in Salem
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே திண்டமங்கலத்தானூர் பகுதியில் வசிக்கும் கருப்பட்டி வியாபாரி அர்ஜுனனின் மகன் பிரகாஷ் (37) கடந்த சில ஆண்டுகளாக திருமணத்திற்கு பெண் பார்த்து கொண்டிருக்கிறார்.

இதில் ஜலகண்டாபுரத்தை சேர்ந்த குமார், சங்ககிரி வெள்ளியம்பாளையம் பகுதியை சேர்ந்த மணி போன்ற புரோக்கர்கள், ஈரோடு விஜயமங்கலில் ஒரு பெண் இருக்கிறார் என்று தெரிவித்து பிரகாஷ் மற்றும் அவரது தந்தையை திண்டல் முருகன் கோவிலுக்கு அழைத்தனர்.
அங்கு பிரியதர்ஷினி (27) என்பவரை மணப்பெண் என காட்டி, செல்வி மற்றும் பிரியா ஆகியோர் தாய் மற்றும் சகோதரி போல நடித்து அறிமுகப்படுத்தினர்.
இதைத் தொடர்ந்து கடந்த மாதம் 27-ந்தேதி ஜலகண்டாபுரம் நாச்சம்பட்டி சித்தேஸ்வரர் கோவிலில் திருமணம் நடந்தது.இந்த திருமணத்திற்கு பிறகு, பிரியதர்ஷினி ஏற்கனவே திருமணமாகி, ஒரு பெண் குழந்தை உள்ளவர் என்றும், புரோக்கர்கள் பணத்துக்காக அவரை கட்டாயமாக பிரகாஷுக்கு திருமணம் செய்து வைத்ததாகவும் தகவல் வெளியானது.
அதன் அடிப்படையில், புரோக்கர் மணி, குமார், சக்திவேல், வள்ளி, செல்வி, பிரியா, மணப்பெண் பிரியதர்ஷினி உட்பட 7 பேர்மீது காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
இதில் செல்வி, பிரியா மற்றும் பிரியதர்ஷினி கைது செய்யப்பட்டு சேலம் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், தலைமறைவான புரோக்கர்களை காவலர்கள் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Brokers scam Shocking incident marriage fraud in Salem