மத்திய பிரதேசத்தில் ஆச்சரியம்: 5.2 கிலோ எடையில் பிறந்த ஆண் குழந்தை; 'பிள்ளையார்' பிறந்துள்ளதாக குடும்பத்தினர் நெகிழ்ச்சி..!
A baby boy weighing 5 and Half kg was born in Madhya Pradesh
மத்திய பிரதேசத்தில் 5.2 கிலோ எடையில் ஆண் குழந்தை பிறந்துள்ள சம்பவம் மருத்துவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
ம.பி-இல் ஜபல்பூரைச் சேர்ந்தவர் சுபாங்கி யாதவ் என்ற கர்ப்பிணி பெண் பிரசவத்துக்காக அதே பகுதியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு மருத்துவமனையில் சிசேரியன் அறுவை சிகிச்சைமூலம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தையின் எடை 5.2 கிலோ ஆக இருந்ததை கண்டு மருத்துவமனை நிர்வாகமே ஆச்சர்யம் அடைந்துள்ளது.
இதுகுறித்து அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மருத்துவர்கள் கூறியதாவது;

வழக்கமாக ஆண் குழந்தை எனில், அதிகபட்சம் 3.2 எடை என்ற அளவில் தான் பிறக்கும். இதுவரை இந்த மருத்துவமனை அப்படித்தான் பிரசவம் நிகழ்ந்துள்ளது. ஆனால், முதல் முறையாக, 5.2 கிலோ எடையில் ஆரோக்கியமாக ஒரு ஆண் குழந்தை பிறந்து எங்களை ஆச்சரியபட வைத்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்.
அதாவது, கர்ப்பகாலத்தில் அந்த கர்ப்பிணி பெண், எடுத்துக் கொண்ட உணவுமுறைகளே குழந்தையின் எடை 5.2 ஆக அதிகரிக்க காரணமாக இருக்கலாம் என்றும், சிசேரியன் ஆபரேஷன் எங்களுக்கு சவாலாக இருந்தது என்றும் கூறியதோடு, தற்போது குழந்தையும், தாயும் நலமாக உள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதனையடுத்து, சுபாங்கி குடுத்பத்தினர் 'எங்கள் வீட்டுக்கு விநாயகரே பிறந்துள்ளார்' என்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதிக எடையில் குழந்தை பிறந்துள்ளதால் தாய் மற்றும் குழந்தையை மருத்துவர்கள் தொடர் கண்காணிப்பில் வைத்துள்ளனர்.
English Summary
A baby boy weighing 5 and Half kg was born in Madhya Pradesh