தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாட்டு சுற்றுப்பயணம்: ரூ.13,016 கோடிக்கு முதலீடுகள் ஈர்ப்பு; 17,813 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள்..! - Seithipunal
Seithipunal


தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக, ஜெர்மனி மற்றும் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.குறித்த சுற்றுப்பயணம் மூலம் தமிழகத்திற்கு ரூ.13,016 கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தம் 17,813 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதில், இந்துஜா குழுமம், தமிழக அரசுடன் மின்சார வாகனம், பேட்டரி தொழில் நுட்பம் மற்றும் உதிரி பாகங்கள் உற்பத்தியில் 5,000 கோடி ரூபாய் முதலீடு செய்திட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடபட்டுள்ளது. இதன்மூலம் 1,000க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் இரண்டு ஆண்டுகளில் தமிழகத்தில் மூன்றாவது தொழில் முதலீட்டை அறிவித்துள்ளது. அதன்படி, சென்னையில் உள்ள அதன் உலகளாவிய கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்ப மையத்தை (GITC) 176 கோடி ரூபாய் முதலீட்டில் விரிவாக்கம் செய்திடவுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamil Nadu CM Stalin foreign tour attracts investments worth Rs 13016 crores


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->