பிறந்தநாளை மரியாதையுடன் தொடங்கிய முதல்வர்…! - அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மலர்வளையம்...!
Chief Minister started his birthday respect Flower garlands memorials Anna and Karunanidhi
தமிழகத்தின் முதல்வரும் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவருமான மு.க. ஸ்டாலின் இன்று தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இதனை முன்னிட்டு அரசியல் தலைவர்கள், கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

பிறந்தநாள் நிகழ்வுகளை மரியாதையுடன் தொடங்கிய அவர், சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடம் மற்றும் கருணாநிதி நினைவிடம் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, மெரினா பகுதியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட 105 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, தனது பிறந்தநாளை மக்கள் நலத்துடன் இணைத்தார்.
பின்னர் வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வுகளில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
இதற்குப் பின் அண்ணா அறிவாலயம் சென்ற முதல்வர், அங்கு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்து அவர்களிடமிருந்து பிறந்தநாள் வாழ்த்துகளை பெற்றுக்கொண்டார்.
English Summary
Chief Minister started his birthday respect Flower garlands memorials Anna and Karunanidhi