நகை வாங்குபவர்களுக்கு அதிர்ச்சி...! மேலும் மேலும் ஏறிக்கொண்டே போகும் தங்கம் விலை...! இன்றைய விலை நிலவரம் என்ன...?
Shock jewelry buyers Gold prices going up and up What price situation today
ஆபரணத் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே சென்று புதிய உச்சங்களைத் தொட்டுக் கொண்டிருக்கிறது. இதனால் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்காக தங்கம் வாங்கத் திட்டமிட்டிருக்கும் பொதுமக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

கடந்த 23-ந்தேதி முதல் தங்கம் படிப்படியாக உயர்ந்து வந்த நிலையில், நேற்று மட்டும் காலை மற்றும் மாலை என இரு கட்டங்களாக திடீரென விலை பாய்ந்தது. ஒரே நாளில் கிராமுக்கு 650 ரூபாயும், சவரனுக்கு 5,200 ரூபாயும் அதிகரித்து, ஒரு சவரன் 1,24,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த திடீர் உயர்விற்கு ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதல்கள் காரணமாக உலகளவில் உருவான போர் பதற்றமே முக்கிய காரணம் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
பதற்ற நிலை நீடிக்கும் வரை தங்கம் விலை மேலும் உயரக்கூடும் என்ற அச்சமும் நிலவுகிறது.இந்நிலையில், இன்று பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை இருந்தபோதிலும் தங்கத்தின் ஏற்றம் தணியவில்லை.
வார விடுமுறையான இன்று கூட கிராமுக்கு 225 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 15,775 ரூபாயாகவும், சவரனுக்கு 1,800 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் 1,26,200 ரூபாயாகவும் விற்பனையாகிறது.
கடைசி சில நாட்களின் தங்க விலை நிலவரம்:
28-02-2026 – ஒரு பவுன் (22 காரட்) ரூ. 1,24,400
27-02-2026 – ஒரு பவுன் ரூ. 1,19,200
26-02-2026 – ஒரு பவுன் ரூ. 1,19,360
கடைசி சில நாட்களின் வெள்ளி விலை நிலவரம்:
28-02-2026 – ஒரு கிராம் ரூ. 320
27-02-2026 – ஒரு கிராம் ரூ. 295
26-02-2026 – ஒரு கிராம் ரூ. 295
மொத்தத்தில், தங்கமும் வெள்ளியும் தொடர்ந்து உயர்வை பதிவு செய்ததால் நகை வாங்குபவர்கள் செலவு சுமையை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
English Summary
Shock jewelry buyers Gold prices going up and up What price situation today