'தமிழகத்துக்காக உழைக்கும் தலைவர்'...! - ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் பாராட்டு..பிறந்தநாள் வாழ்த்து...! - Seithipunal
Seithipunal


திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழகத்தின் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் இன்று தனது 73-வது பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடி வருகிறார். பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களிலும், வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்திலும் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, கோபாலபுரத்தில் உள்ள தனது இல்லத்திற்குச் சென்று தாயார் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார்.

இந்நிலையில், அவருக்கு அரசியல் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரிடமிருந்து வாழ்த்துகள் தொடர்ந்து குவிந்து வருகின்றன.

அந்த வகையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ஒரு சமூகத்தின் முன்னேற்றத்திற்கு பெண்களின் வாழ்க்கை உயர்வே அடித்தளம் என்றும், அதை உணர்ந்து தமிழ்நாடு பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், புதுமைப் பெண் திட்டம் எதிர்காலத்துக்கான விதை என்றும், விடியல் பயணம் நம்பிக்கையின் ஒளியாகவும், மகளிர் உரிமைத் தொகை பெண்களின் எழுச்சிக்கான வலிமையாகவும் திகழ்கின்றன; இவை வெறும் அறிவிப்புகள் அல்ல, சமூக மாற்றத்துக்கான வலுவான அடிக்கற்கள் என்றும் அவர் பாராட்டியுள்ளார்.

இந்த மாற்றங்களை செயலால் நிரூபித்த தலைவர், தனது நேசத்திற்கும் நட்பிற்கும் உரிய மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் என அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

leader who works Tamil Nadu Kamal Haasan praises Stalin Happy birthday


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->