வளைகுடா பதற்றம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்...! - இ.பி.எஸ். கோரிக்கை
Gulf tension We must ensure safety Tamilans EPS Request
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் மேற்கொண்ட தாக்குதல்களைத் தொடர்ந்து வளைகுடா பகுதிகளில் கடும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. பாதுகாப்பு காரணங்களால் பல நாடுகள் தங்களது வான்வழி எல்லைகளை மூடியுள்ளன.
இதன் காரணமாக துபாய் விமான நிலையம் மூடப்பட்டு, விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.இதனால் ஈரான், துபாய், அபுதாபி, சவூதி அரேபியா உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வரும் இந்தியர்களும், அமெரிக்காவில் இருந்து பயணம் செய்ய இருந்த இந்தியர்களும் தாய்நாட்டிற்கு திரும்ப முடியாமல் சிக்கித் தவித்து வருகின்றனர்.

தமிழர்கள் அதிகம் வாழும் கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் பகுதிகளிலும் அச்சநிலை நிலவுகிறது.வான்வழி சேவைகள் நிறுத்தப்பட்டதால் தேசிய மற்றும் தனியார் விமானங்கள் பல ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன் விளைவாக அங்கு வசிக்கும் தமிழர்கள் மற்றும் இந்தியர்கள் இந்தியா திரும்ப முடியாமல் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்த சூழ்நிலையைத் தொடர்ந்து சவூதி அரேபியா மற்றும் குவைத் நாடுகளில் உள்ள இந்தியர்களுக்காக இந்திய தூதரகம் அவசர உதவி எண்களை அறிவித்து, அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில், வளைகுடா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றத்தை கருத்தில் கொண்டு அங்கு வாழும் இந்தியர்களும் தமிழக மக்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், குறிப்பாக தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
Gulf tension We must ensure safety Tamilans EPS Request