கோரிக்கைகள் நிறைவேற்ற கோரி அரசு மருத்துவர்கள் ‘சாகும் வரை’ உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அமல்படுத்திய அரசாணை 354-ஐ மீண்டும் நடைமுறைப்படுத்துதல், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு ரூ.3,000 ஊக்கப் படி வழங்குதல், நோயாளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் மருத்துவ பணியிடங்கள் உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் நீண்ட காலமாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், போராட்டத்தை தீவிரப்படுத்தும் வகையில் அடுத்த கட்ட நடவடிக்கையாக வரும் 5-ஆம் தேதி முதல் சென்னையில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கப்போவதாக அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அகிலன், சுந்தரேசன்,பாலகிருஷ்ணன், ராமலிங்கம் ஆகியோர் தெரிவித்ததாவது,“கோரிக்கைகள் நிறைவேறும் வரை, 5-ஆம் தேதி முதல் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்க செயற்குழுவில் ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Government doctors announce hunger strike until death demanding fulfillment demands


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->