ஈரான் அரசியலில் அதிர்ச்சி திருப்பம்…35 ஆண்டுகள் ஈரானை வழிநடத்திய அலி காமேனி மறைவு...! - 40 நாள் தேசிய துக்கம் அறிவிப்பு - Seithipunal
Seithipunal


அலி காமேனி தலைமையில் கடந்த 35 ஆண்டுகளாக ஈரானை வழிநடத்தி வந்த அவர், 86 வயதில் இயற்கை எய்தியதாக Islamic Republic  News  Agency உள்ளிட்ட அரசு ஊடகங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.

இந்த செய்தி ஈரானில் மட்டுமின்றி உலக அரசியல் வட்டாரங்களிலும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.இதற்கு முன், அமெரிக்கா–இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலில் அவர் உயிரிழந்ததாக டொனால்ட்  டிரம்ப் குற்றஞ்சாட்டியிருந்தார்.

ஆனால் அதனை ஈரான் தரப்பு மறுத்திருந்தது. காமேனியை “வரலாற்றின் மிக மோசமான தலைவர்களில் ஒருவர்” என விமர்சித்த அவர், இந்த மரணம் ஈரானிய மக்களுக்கு நாட்டை மீட்டெடுக்க ஒரு வாய்ப்பாக அமையும் என்றும், தாக்குதல்கள் தொடரும் என்றும் கடுமையாக எச்சரித்திருந்தார்.

இந்நிலையில், இயற்கை மரணம் ஏற்பட்டதாக அரசு ஊடகங்கள் உறுதி செய்திருப்பது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. அவரது மறைவைத் தொடர்ந்து நாடு முழுவதும் 40 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என்று ஈரான் அரசு அறிவித்துள்ளது.

ஈரானிய தேசிய பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில், “காமேனியின் தியாகம் கொடுங்கோலர்களுக்கு எதிரான மக்களின் எழுச்சிக்கு தொடக்கமாக அமையும்” என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், சமீபத்திய தாக்குதல்களில் அவரது குடும்பத்தினரும் உயிரிழந்ததாக, இஸ்லாமிய புரட்சிகர காவல்படையுடன் தொடர்புடைய பார்ஸ் நியூஸ் எஜென்சி செய்தி வெளியிட்டுள்ளது.தெஹ்ரான் நகரில் அமைந்திருந்த அவரது இல்லம் மற்றும் அலுவலக வளாகங்கள் சேதமடைந்ததாக இஸ்ரேல் தரப்பு தெரிவித்துள்ளது.

அவரது உடல் புகைப்படங்கள் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உயர்மட்ட தலைவர்களிடம் காட்டப்பட்டதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவருடன் சேர்த்து, ஈரானின் பாதுகாப்புத் துறை அமைச்சர் அஜிஸ் நசிர்சாதே மற்றும் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் தரைப்படை தளபதி முகமது பாக்பூர் உள்ளிட்ட உயரதிகாரிகளும் தாக்குதல்களில் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Shocking turn Iranian politics Ali Khamenei who led Iran 35 years passes away 40 days national mourning declared


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->