தாய்லாந்தின் புதிய பிரதமராக அனுடின் சார்ன்விரகுல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். - Seithipunal
Seithipunal


தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தின் புதிய பிரதமராக அனுடின் சார்ன்விரகுல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்னை நிலவி வருகிறது.

இது தொடர்பாக தாய்லாந்து இளம் பெண் பிரதமர் பென்டோக்டர்ன் ஷினாவத்ரா, கம்போடியா முன்னாள் பிரதமர் ஹுன் சென் உடன் தொலைபேசியில் பேசினார். அப்போது, தாய்லாந்து தளபதியை குற்றம்சாட்டி அவர் பேசிய ஆடியோ கசிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வந்ததோடு, பதவி விலகவேண்டும் என போராட்டங்களும் வலுப்பெற்றன.

இதையடுத்து நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை மீறியதாக பிரதமர் பதவியில் இருந்து ஷினாவத்ராவை 'சஸ்பெண்ட்' செய்து அந்நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  அவரை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி, சமீபத்தில் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், அந்நாட்டின் புதிய பிரதமரை தேர்வு செய்ய 492 உறுப்பினர்களை கொண்ட அந்நாட்டு பாராளுமன்ற கீழ்சபையில் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. அதன்படி, அனுடின் சார்ன்விரகுல் மற்றும் சாய்கசேம் நிடிஸ்ரீ இடையே போட்டி நிலவிய நிலையில், அனுடின் சார்ன்விரகுல் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு ஆதரவாக 247 ஓட்டுகள் பதிவாகிய நிலையில், புதிய பிரதமராக தேர்ந்தெடுக்ப்பட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Anutin Charnvirakul has been elected as the new Prime Minister of Thailand


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->