அமெரிக்காவில் ஸ்பேஸ் எக்ஸ் போல, ஆந்திராவின் விண்வெளி நகரம் அமைக்கப்படும்: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு..!
Andhra Pradesh Chief Minister Chandrababu Naidu has announced that a space city will be set up near Tirupati
ஆந்திராமுதல்வர் சந்திரபாபு நாயுடு, திருப்பதி அருகே விண்வெளி நகரம் அமைக்கப்பட்டு தனியார் செயற்கைக்கோள்கள் அங்கிருந்து விண்ணில் செலுத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.
விசாகப்பட்டினத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அத்துடன், தகவல் மையம் முதல் விண்வெளி ஆய்வு வரை ஆந்திராவை தொழில்நுட்பத்துக்கான மையமாக மாற்றுவதற்கான திட்டங்களை அவர் வெளியிட்டார்.
இதில் லேபாக்ஷி மற்றும் திருப்பதியில் இரண்டு விண்வெளி நகரங்கள் அமைக்கப்படும் என்றும், திருப்பதியில் தனியார் செயற்கைக்கோள்கள் தயாரித்து ஏவும் வகையில் கட்டமைக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதாவது, அமெரிக்காவில் ஸ்பேஸ் எக்ஸ் உள்ளது போல், ஆந்திராவின் விண்வெளி நகரில் இருந்து தனியார் செயற்கைக்கோள்கள் ஏவப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், பல்கலைக்கழகம், ஆராய்ச்சி அமைப்புகள், ஸ்டார்ட் அப்கள் மற்றும் தொழில் துறையினருக்கு உதவும் வகையில் குவாண்டம் கம்ப்யூட்டிங் துறையில் ஆந்திராவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். மேலும், அமராவதியில் வரும் 1ந் தேதி முதல் குவாண்டம் கம்ப்யூட்டர் செயல்பட தொடங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஆந்திரா தகவல் தொழில்நுட்பத்துறையில் கடந்த ஆண்டு 88 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. கூகுள், டிசிஎஸ், காக்னிசன்ட் நிறுவனங்கள் மூலம் விசாகப்பட்டினம் மிகப்பெரிய தகவல் மையமாக மாறும் எனவும் ஆந்திர முதல்வர் கூறியுள்ளார்.
English Summary
Andhra Pradesh Chief Minister Chandrababu Naidu has announced that a space city will be set up near Tirupati