மத்திய, மாநில அரசுகள் சரியில்ல! யார வெட்றதுனும் தெரியல! சீமான் ஆவேசம்!!
Seeman spoke controversly in kallakuruchi meeting
நாம் தமிழர் கட்சியின் சார்பில் யாதும் ஊரே என்ற தலைப்பில் கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொது கூட்டத்தில் சீமான் பேசி முடித்த பிறகு நாம் தமிழர் கட்சி சார்பில் முதலாம் சடையவர் சோழ சுந்தர பாண்டியன் சிலை வழங்கப்பட்டது.

மேலும் ரிஷிவந்தியம் வரலாறு என்ற புத்தகமும் வீரவாளும் பரிசாக வழங்கினர். அதனைப் பெற்றுக் கொண்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் "இப்படி நிறைய வாளுலாம் கொடுக்கிறாங்க... வேல் எல்லாம் பூஜை அறையில் தான் இருக்கு... யாரை வெட்றதுனு தான் தெரியல.. இதுல என்ன வேடிக்கைனா இந்த வாளையும் வேலையும் வைத்து போர் செஞ்ச வரைக்கும் நாம் சரியாக இருந்தோம். பூஜை அறையில் வைத்து பூஜை செஞ்ச பிறகு எல்லாம் போச்சு. இதை வைத்து மறுபடியும் போர் செய்ய வேண்டும்" என ஆவேசமாக பேசி இருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
English Summary
Seeman spoke controversly in kallakuruchi meeting