ஈழத்தில் நடந்தது தமிழகத்திலும் நடக்கும் - எச்சரிக்கும் சீமான்!
Seeman say about tamilnadu job north indians issue
இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தாவது, "நிலமும், வளமும் நம்முடையது. ஆனால் வேலைவாய்ப்பை வடமாநிலத்தவருக்கு கொடுப்பது. நம்மை நிலமற்ற கூலிகளாக்கி வெளியேற்றிவிட்டு, பெருத்த ஏமாற்றத்தை அரசு செய்கிறது. இந்த கொடும்போக்கைக் கண்டித்து நாங்கள் தொடர்ந்துப் போராடுவோம்” என்றார்.
“இங்கே இருக்கும் தமிழர்களை மிக நுட்பமாக உழைப்பிலிருந்து வெளியேற்றிவிட்டார்கள். பிறகு வேலைக்கு ஆள் பற்றாக்குறை ஏற்படும்போது, அதை நிரப்ப வட மாநிலத்தவரை வலிந்துப் புகுத்துகிறார்கள்.

இங்கே வந்து அவர்கள் வேலை செய்து பெறுகின்ற சம்பளத்தைக் கொண்டு பெருமளவு நமது மாநிலத்தின் பொருளாதாரம் வேறு மாநிலத்திற்குச் செல்கிறது. அவர்கள் உழைத்து, அதற்கேற்ற வருமானத்தை ஈட்டுவதுக் கூட பரவாயில்லை.
ஆனால், அவர்களுக்கு குடும்ப அட்டை கொடுப்பது போதாதென்று வாக்காளர் அட்டையும் சேர்த்துக் கொடுக்கப்படுகிறது. அதன் மூலம் இந்த நிலத்தின் அரசியலையே அவர்கள் தீர்மானிக்கும் நிலை ஏற்படும். அப்படி நடந்தால், இந்த நிலத்தின் மக்கள் அரசியல் அதிகாரமற்ற அடிமைகளாக மாற நேரிடும்.
நாம் அடிமையானால், நிலமற்றவராவோம். நிலமற்றவர்கள் வேறு இடத்திற்கு அடித்து விரட்டப்படுவார்கள். ஈழத்தில் எங்கள் உறவுகளுக்கு என்ன நடந்ததோ அது எங்களுக்கும் இங்கு நடக்கும்.

அவர்களுக்காகவாவது ஏதிலிகளாக வந்து குடியேற இங்கு ஒரு தாய்நிலம் இருந்தது. நாம் இங்கிருந்து அடித்து விரட்டப்பட்டால் எங்கு செல்வது? அதனால், நாங்கள் அரசை எச்சரிக்கின்றோம். அவர்களுக்குக் குடும்ப அட்டை கொடுப்பதுக் கூட பரவாயில்லை. ஆனால், வாக்காளர் அட்டை மட்டும் கொடுக்கவேக் கூடாது என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறோம். பெரும் விளைவுகள் ஏற்படும் முன் தமிழக மக்கள் விழித்துக்கொள்ள வேண்டும்” என்று சீமான் தெரிவித்தார்.
English Summary
Seeman say about tamilnadu job north indians issue