விஜயலட்சுமி விவகாரம் || சீமானின் 2 பரபரப்பு கடிதங்கள்! ஆஜரானாலும் பலன் இல்லை! முழு விவரம் இதோ!
Seeman gave 2 explanation letter at police station
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி திருமணம் செய்து கொண்டு ஏமாற்றியதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்ததின் அடிப்படையில் சென்னை போலீசார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.
அதேபோன்று திருவள்ளூர் மாவட்ட நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜராகி விஜயலட்சுமி வாக்குமூலம் அளித்தார். மேலும் சீமான் கட்டாயப்படுத்தி 7 முறை கரு கலைப்பு செய்ததாக குற்றம் சாட்டியதை அடுத்து அவருக்கு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார் கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி விசாரணைக்காக ஆஜரமாகும் உத்தரவிட்டிருந்த நிலையில் ஆஜராகாததால் இன்று ஆஜராகும் அறிவுறுத்தி இருந்தனர். ஆனால் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்றும் ஆஜராகாத நிலையில் அவர் சார்பாக வழக்கறிஞர்கள் ஆஜராகி காவல் நிலையத்தில் 2 விளக்க கடிதங்கள் கொடுத்தனர்.
ஒரு கடிதத்தில் குறிப்பாக "ஏற்கனவே பிற மாவட்டங்களில் ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகள் காரணமாகவும் அரசியல் வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய சூழ்நிலை உள்ளதாலும் என்னால் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராக இயலவில்லை. என் சார்பில் வழக்கறிஞர்கள் ஆஜராக அதிகாரம் வழங்கியுள்ளேன். இந்த வழக்கு சம்பந்தப்பட்ட ஆவணங்கள் ஏதேனும் வழங்கப்பட வேண்டும் என்றால் அவற்றை எனது வழக்கறிஞர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம்" என தெரிவித்துள்ளார்.

மற்றொரு கடிதத்தில் "கடந்த எட்டு ஒன்பது 2023 தேடிட்ட குற்றவியல் விசாரணை நடைமுறைச் சட்டம் 160ன் படி என்னை விசாரணை செய்ய வேண்டி உள்ளதால் தங்கள் முன் ஆஜராகும் ஆறு காவல்துறை அழைப்பானை அனுப்பி உள்ளீர்கள். இந்த வழக்கில் என்னை விசாரணை செய்ய வேண்டிய அவசியம் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கு சம்பந்தமாக அனைத்து ஆவணங்களின் நகலையும் வழங்க வேண்டும்.
குறிப்பாக, 1.புகார், 2.மனு முதல் தகவல் அறிக்கை, 3.புகார்தாரரின் விசாரணை வாக்குமூலம், 4.இந்த வழக்கை மீண்டும் விசாரணை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவு ஏதேனும் இறப்பின் அதன் நகல் புகார்தாரரோ அல்லது வேறு சம்பந்தப்பட்ட சாட்சிகளோ இதர சாட்சிகளின் விசாரணை வாக்கும் மூலம் மற்றும் வழக்கின் தொடர்புடைய இதர ஆவணங்களின் நகல்கள் எனக்கு வழங்கப்பட்டால் தான் மேற்கண்ட வழக்கில் என்னால் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க ஏதுவாகும்.

மேற்கண்ட ஆவணங்கள் இல்லாமல் விசாரணைக்கு நான் ஆஜர் ஆவது எந்த பயலனும் அளிக்காது. எனவே நான் மேலே குறிப்பிட்ட வழக்கின் விசாரணை குழு ஒத்துழைப்பு தர தயாராக உள்ளேன். ஆகவே நியாயமான மற்றும் நேர்மையான விசாரணை நடைபெற மேற்கண்ட ஆவணங்களின் நகல்களை வழங்குமாறு தங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்" என மற்றொரு கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
English Summary
Seeman gave 2 explanation letter at police station