லியோ பட நெருக்கடிக்கு இதுதான் காரணம்! உண்மையை போட்டு உடைத்த சீமான்!!
Seeman accused Vijay entry into politics as crisis for Leo
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. இசை வெளியீட்டு விழா முதல் ட்ரெய்லர் வெளியீடு வரை அதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்காத நிலையில் தற்போது ரசிகர்களுக்கான 4 மணி சிறப்பு காட்சிக்கும் தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை.

இந்நிலையில் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் லியோ படத்திற்கு நெருக்கடி கொடுக்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து பேசிய அவர் "தற்போது திரைத்துறை மொத்தமாக சிதைந்து போய் உள்ளது. கார்ப்பரேட் மயமாகிவிட்ட சினிமா துறையில் ஒருத்தர் இரண்டு பேர் ஒட்டு மொத்த திரை அரங்குகளையும் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

முன்பை போல 50 நாட்கள், 100 நாட்கள் என எந்த ஊரிலும் படம் ஓடுவது இல்லை. உரிய காலங்களில் அதிக காட்சிகளை திரையிட்டு தான் வருமானத்தை ஈட்ட முடியும். லியோ படத்திற்கான சிறப்பு காட்சிகளை தடுப்பதால் என்ன கிடைக்கப் போகிறது? அவர் அரசியலுக்கு வருவதாக அறிவித்திருப்பதால் இந்த படத்திற்கு நெருக்கடி கொடுக்கிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது என செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
English Summary
Seeman accused Vijay entry into politics as crisis for Leo