மதம் மாறினால் SC சான்றிதழ் ரத்தாகிவிடும்! - Seithipunal
Seithipunal


சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த தேசிய தாழ்த்தப்பட்ட ஆணையத் துணைத் தலைவர் அருண் ஹல்தார் தெரிவித்தாவது, 

"நாடு முழுவதும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகள், அநீதிகள் தொடர்பாக புகார்களை விசாரணை செய்து வருகிறோம். 

தேசிய தாழ்த்தப்பட்ட ஆணையத்துக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக 200 புகார்கள் தமிழகத்தில் இருந்து வந்துள்ளன. அதில், 100 வழக்குகள் மீது விசாரணை நடைபெற்று, 60 வழக்குகளுக்குத் தீர்வுகாணப்பட்டுள்ளது.

பட்டியலின மக்கள் மீதான வன்முறை, தாக்குதல்களில் ராஜஸ்தான் முதலிடத்திலும், தமிழகம் 2-வது இடத்திலும் உள்ளது.

தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சராக ராஜகண்ணப்பன் பொறுப்பு வகித்தபோது, அரசு அதிகாரியை சாதி பெயரைக் கூறித் திட்டியதாக கூறப்படும் விவகாரத்தில் விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர்கள் மதம் மாறும்போது, தானாக பட்டியலின வகுப்பிலிருந்து வெளியேறுகின்றனர். மதம் மாறியவர்களுக்கு பட்டியலின வகுப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டால், அது போலி. இந்த போலிச் சான்றிதழ் வழங்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பல இடங்களில் பட்டியலின மக்களுக்கென்று தனி சுடுகாடு, தனி பாதை உள்ளது. அனைவருக்கும் ஒரே பாதை அமைக்க மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்று அருண் ஹல்தார் தெரிவித்தார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SC community Certificate religion conversion


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->