"தப்பான இன்ஜினை" வைத்துக்கொண்டு பிரதமர் வந்தவுடனேயே நீங்கள் அடையும் பதற்றம் நன்றாகவே தெரிகிறது; முதல்வருக்கு பதிலடி கொடுத்துள்ள தமிழிசை சவுந்தரராஜன்..! - Seithipunal
Seithipunal


'பிரதமர் சொல்லும் ''டபுள் எஞ்சின்'' எனும் ''டப்பா எஞ்சின்'' தமிழ்நாட்டில் ஓடாது'என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்து இருந்தார். இதற்கு பதிலடி கொடுத்து, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் பதிவிட்டுள்ளதாவது:

''தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே நீங்கள் ஒரு ட்ரபிள் என்ஜின் (trouble engine) கவர்ன்மென்ட் வைத்துக்கொண்டு எல்லா மாநிலங்களிலும் வெற்றிகரமாக டபுள் இன்ஜின்(double engine) கவர்ன்மென்ட் நடத்திக் கொண்டிருக்கும் மோடி அவர்களை விமர்சிக்கிறீர்கள்.

குஜராத் மகாராஷ்டிரா உத்தர் பிரதேசம் ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் மாநில அளவில் வெற்றியை தருவது மட்டுமல்லாமல் மாநகராட்சி அளவில் வெற்றியை தந்து அது ட்ரிபிள் இஞ்சின் trible engine) கவர்மெண்டாக போய்க்கொண்டிருக்கிறது.  

ஆனால், பஞ்சாயத்து தேர்தலை கூட  நடத்த பயந்து  தமிழ்நாட்டில் ட்ரபிள் இன்ஜின் (trouble engine) கவர்ன்மென்ட் ஆக போதை, கடன், பாதுகாப்பின்மை போன்றவற்றை ஏற்படுத்தி ஒட்டிக்கொண்டு இருக்கும் உங்கள் கவர்ன்மென்ட் போல் அல்லாமல்..

 தமிழ்நாட்டில் நல்ல டபுள் இன்ஜின் கவர்மெண்ட் கொண்டுவர வேண்டுமென்றால் அதை "டப்பா இஞ்சின்" என்று விமர்சிக்கிறீர்கள் நீங்கள் தான் "தப்பான இன்ஜினை" வைத்துக்கொண்டு ஓட்டிக் கொண்டிருக்கிறீர்கள்  முதல்வர் அவர்களே..! தமிழ்நாட்டிற்கு பிரதமர் வந்தவுடனேயே நீங்கள் அடையும் பதற்றம் உங்களது டிவீட்டில்
 நன்றாகவே  தெரிகிறது.'' என்று தமிழிசை பதிலளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamilisai Soundararajan has hit back saying that the Chief Minister became anxious as soon as the Prime Minister arrived


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?


செய்திகள்



Seithipunal
--> -->