பிறந்தநாளில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்…! ராம் சரண் நடித்துள்ள ‘பெத்தி’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு...!
Surprise fans their birthday Glimpse video Ram Charan film peddi released
தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான ராம் சரண், தனது அடுத்த வெற்றியை நோக்கி புதிய உற்சாகத்துடன் பயணிக்கிறார்.அண்மையில் வெளியான ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், அதனைத் தொடர்ந்து ரசிகர்களை கவரும் வண்ணம் அவர் புதிய முயற்சியில் இறங்கியுள்ளார்.

இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பெத்தி’ திரைப்படத்தில் ராம் சரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் கதாநாயகியாக இணைந்திருப்பது கூடுதல் கவனம் ஈர்க்கிறது.
அதோடு, கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார், ‘மிர்சாபூர்’ புகழ் திவ்யேந்து, ஜகபதி பாபு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களும் முக்கிய வேடங்களில் தோன்றுகின்றனர்.
பெரும் செலவில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு இசை மந்திரவாதி ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படம், வருகிற ஏப்ரல் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடும் ராம் சரணுக்கு ரசிகர்களும், திரைப்பிரபலங்களும் வாழ்த்துகளை குவித்து வருகின்றனர். அதனை முன்னிட்டு, ‘பெத்தி’ படக்குழு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் அளிக்கும் வகையில், படத்தின் பிரத்யேக ‘கிளிம்ப்ஸ்’ வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Surprise fans their birthday Glimpse video Ram Charan film peddi released