பாலியல் தொல்லையை வெளிப்படுத்திய பெண்…இதற்கு பழிவாங்க கத்தியால் தாக்கி கொலை செய்த துணை நடிகர்...! - Seithipunal
Seithipunal


மும்பை அருகிலுள்ள தானே மாவட்டம் காஷிமிரா பகுதியில் நடந்த கொடூர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த 36 வயதான சுமன் , தாம் வேலை செய்து வந்த வீட்டில் கத்திக்குத்து காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.இந்த சம்பவம் தொடர்பாக காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டபோது, அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின.

அந்த வீட்டில் வசித்து வந்த துணை நடிகர் ஆஷிஸ் மேஷ் ராம் (42), வேலைக்கார பெண்ணிடம் தவறான முறையில் நடந்து கொண்டு, பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நடத்தை காரணமாக அதிர்ச்சி அடைந்த சுமன், அந்த வீட்டில் வேலை செய்வதை நிறுத்தியதுடன், சம்பவத்தை துணை நடிகரின் அண்ணனிடம் தெரிவித்தார்.

அதற்கு அவர், “இனி அந்த நபர் வீட்டுக்கு வரமாட்டார்” என உறுதி அளித்து சமாதானப்படுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆனால், சம்பவ நாளன்று சுமன் மீண்டும் வேலைக்கு வந்ததை அறிந்த ஆஷிஸ், அங்கு சென்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பின்னர் கொடூரமாக கத்தியால் தாக்கி கொலை செய்ததாக காவலர்கள் சந்தேகிக்கின்றனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவலர்கள், தற்போது தலைமறைவாக உள்ள துணை நடிகரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த கொலைச் சம்பவம், மும்பை பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

woman who revealed harassment supporting actor attacked and killed her knife revenge


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->