பரபரப்பு விசாரணை! அண்ணா பல்கலைக்கழகத்தில் மீண்டும் பாலியல் சர்ச்சை…! - மாணவி புகாரில் பேராசிரியர் சஸ்பெண்ட்...! - Seithipunal
Seithipunal


சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தைச் சுற்றி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் புதிய சர்ச்சை வெடித்துள்ளது. அண்மையில் மாணவி மீதான பாலியல் பலாத்காரம் வழக்கு தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், அதற்கு இணையான இன்னொரு குற்றச்சாட்டு வெளிச்சத்துக்கு வந்துள்ளது.அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவி ஒருவர், நேற்று மாலை நேரடியாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தை அணுகி பரபரப்பான புகார் மனு ஒன்றை அளித்தார்.

அந்த மனுவில், பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் தன்னிடம் நேரடியாகவும், செல்போன் மூலமாகவும் தொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுத்து வருவதாகவும், இதை வெளியிட முயன்றால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என மிரட்டியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புகார் பெரும் அதிர்வை ஏற்படுத்திய நிலையில், காவல் ஆணையர் அருண் உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்படி, உயர் அதிகாரிகளின் கண்காணிப்பில் கோட்டூர்புரம் காவலர்கள் விரைந்து விசாரணையை தொடங்கினர்.

இதற்கிடையில், குற்றச்சாட்டில் சிக்கிய பேராசிரியர் ஞானவேல் பாபுவை அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் இடைக்காலமாக பணிநீக்கம் (சஸ்பென்ஷன்) செய்துள்ளது.

தற்போது துறை ரீதியான விசாரணையும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.இதற்க்கு முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக மாணவர் அமைப்புகள் பல்கலைக்கழக வளாகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டது சூழ்நிலையை மேலும் பரபரப்பாக்கியுள்ளது.

இந்த தொடர் சம்பவங்கள், கல்வி நிறுவனங்களில் மாணவிகளின் பாதுகாப்பு குறித்து கடும் கேள்விகளை எழுப்பியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sensational investigation Another harassement scandal at Anna University Professor suspended student complaint


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!


செய்திகள்



Seithipunal
--> -->