ஏழு நாட்களில் ரூ.1000 கோடி வசூலித்த துரந்தர் 2; இந்தியாவில் மட்டும் 744 கோடி ரூபாய் வசூல்; உற்சாகத்தில் ரசிகர்கள்..!
Durandhar 2 Grosses rs 1000 Crores in Seven Days
ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான 'துரந்தர் 2’ திரைப்படம் ஒரு வாரத்தில் ரூ.1000 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது.
ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் உருவான படம் துரந்தர். கடந்த ஆண்டு இந்தி மொழியில் மட்டும் வெளியாகி ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்தது. பாகிஸ்தானுக்கான ஸ்பை திரில்லராக உருவாகியுள்ள இந்த படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இதன் தொடர்சியாக 'துரந்தர் 2; தி ரிவெஞ்ச்' என்ற பெயரில், 02 ஆம் பாகம் கடந்த 19-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.
இந்த படத்தில் ரன்வீருடன், சாரா அர்ஜுன், அக்ஷய் கன்னா, சஞ்சய் தத், மாதவன் உள்ளிட்ட திரை நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். இப்படம் வெளியாகி ஏழே நாட்களில் ரூ.1000 கோடி வசூல் ஈட்டி சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் மட்டும் சுமார் 744 கோடி ரூபாய் வசூலித்து மாபெரும் சாதனை படைத்துள்ளது.
இருப்பினும், ரூ.1000 கோடி வசூலித்திருந்தாலும் 06 நாட்களில் ரூ.1000 கோடி ரூபாய் வசூலித்த புஷ்பா 2 படத்தின் சாதனையை முறியடிக்கத் தவறிவிட்டது. மேலும் 'துரந்தர் 2' திரைப்படம் ரூ.2000 கோடி வசூலை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Durandhar 2 Grosses rs 1000 Crores in Seven Days